கணவரை கொல்ல முயன்ற மனைவி மீது வழக்கு பதிவு

கணவரை கொல்ல முயன்ற மனைவி மீது வழக்கு பதிவு
X
சிவகங்கை அருகே கணவரை கொல்ல முயன்ற மனைவி உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு
சிவகங்கை அருகே செங்குளி பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (42), இவரது மனைவி கீதா (33). சுரேஷ்குமார் கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அங்கிருந்து பணத்தை தனது மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். சமீபத்தில் ஊருக்கு திரும்பிய சுரேஷ்குமார். நான் அனுப்பிய பணம் குறித்து தோவியிடம் கணக்கு கேட்டார். இதுகுறித்து சரியாக பதிலளிக்காததால், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, கீதா தனக்கு தெரிந்த ஆனைமாவலியைச் சேர்ந்த பிரபாகரன் (27), சிவகங்கை சேதுபதி நகரைச் சேர்ந்த ஜீவன் (30) ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கரேஷ்குமார் மீது மின்சாரத்தை பாய்ச்சியுள்ளர். ஆனால் சுரேஷ்குமார் அங்கிருந்து தப்பி வெளியே ஓடினார், தொடர்ந்து, கீதாவும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் கரேஷ்குமாரை சிவகங்கை மருத்துவமனையிலும், கீதாவை மதுரை தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இது குறித்து மதகுபட்டி போலீசார் கீதா உட்பட 3 பேர் மீது வழக்கு பதித்து, பிரபாகரன், ஜீவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்
Next Story