அரசு அங்காடியில் பட்டுக்கூடுகள் விற்பனை ஜோர்
தர்மபுரி 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் தினசரி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி நாமக்கல் சேலம் திருவண்ணாமலை வேலூர் மாவட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் பட்டுக்கூடு விவசாயிகள் விற்பனைக்காக வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வருவது வழக்கம் இன்று ஏப்ரல் 26 பல்வேறு பகுதிகளில் இருந்து 28 விவசாயிகள் 3049 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ஒரு கிலோ 654 ரூபாய்க்கும், சராசரியாக கிலோ 522 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக கிலோ 346 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் இன்று 16,03,467 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாக அலுவலர் தெரிவித்துள்ளனர்.
Next Story




