கடலோர பாதுகாப்பு படையில் சஜாக் ஆப்ரேஷன் 

கடலோர பாதுகாப்பு படையில் சஜாக் ஆப்ரேஷன் 
X
கன்னியாகுமரி
இந்தியாவின் தென் முனையான சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் சஜாக் ஆப்ரேஷன் கடலோரப் பாதுகாப்புப் படையால் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரியில் சஜாக் ஆபரேஷன் நடந்தது.      சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீஸார், அதி நவீன ரோந்து படகில் சென்று பைனாக்குலர்கள் மூலம் கண்காணித்தும் சஜாக் ஆபரேஷனை நடத்தினார்கள். அவர்கள் கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் கூடங்குளம் வரையிலான பகுதி வரை கண்காணிப்பில் ஈடுபட்டனர். மணலில் ஓடும் அதி நவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டது.      அதேபோல் அதிவிரைவு விசைப்படகுகளில் தொலைநோக்கு கருவிகள் உதவியுடன் தொலைதூர பகுதிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது குமரி கடலில் செல்லும் படகுகளை வழிமறித்து சோதனை செய்ததோடு அவர்களிடம் உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அவர்களிடம் கடலில் சந்தேகம்படும்படி கப்பல்கள், படகுகள் தென்பட்டாலோ கடலோர குழும போலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினர்.
Next Story