ஓய்வு பெறும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதி நாள் வரை பணிபுரிய நீட்டிப்பு வழங்க வேண்டும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.

X
NAMAKKAL KING 24X7 B |26 April 2025 3:56 PM ISTஅரசு பள்ளிகளில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள், கல்வி ஆண்டில் இறுதிநாள் வரை பணிபுரிய நீட்டிப்பு வழங்க வேண்டும் என, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள், கல்வி ஆண்டில் இறுதிநாள் வரை பணிபுரிய நீட்டிப்பு வழங்க வேண்டும் என, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ளனர். வேண்டுகோள் இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் நாமக்கல் ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது.தமிழகத்தில் கடந்த 2022 ஆண்டு கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், கல்வி ஆண்டின் இடையில் பணி ஓய்வு பெற்றால், அவர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை, மறு நியமன அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு முழு பயனையும் அளிக்கவில்லை. எனவே அரசு உத்தரவில் உள்ள, கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை என்ற வாக்கியத்தைநீக்கிவிட்டு, கல்வி ஆண்டின் இடையில் பணி ஓய்வு பெற்றவர்கள் கல்வி ஆண்டின் இறுதி நாள் வரை, பணி நீட்டிப்பில் பணிபுரிய அனுமதி வழங்கப்படுகிறது, என்று அரசு உத்தரவை திருத்தம் செய்து வெளியிட வேண்டுகிறோம். அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
