பூனை கடியால் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

பூனை கடியால் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
X
மதுரையில் பூனை கடியால் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 25) கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது இரண்டு பூனைகள் சண்டையிட்டு கொண்டிருந்ததை விரட்டிய போது பூனை ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து சிகிச்சை பெறாமல் அலட்சியமாக விட்ட நிலையில் அது பெரிய அளவிலான புண்ணாக மாறியுள்ளது- பின்னர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் அங்கிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். பின்னர் பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்தபோது திடீரென்று தப்பி ஓட முயன்றவரை பிடித்து இரவு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து சிகிச்சைக்காக ரேபிஸ் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தனி அறையில் இருந்த நிலையில் கடுமையான வலி மற்றும் மன உளைச்சல் காரணமாக திடிரென அதிகாலை அவருக்கு வழங்கப்பட்டிருந்து போர்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அரசு மருத்துவமனை காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பூனைக்கடித்து அலட்சியமாக விட்டதால் மூன்று மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய உடல் நல குறைவு ஏற்பட்டு இளைஞர் தனியாக சிகிச்சைக்காக அடைக்கப்பட்ட நிலையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . பூனைக்கடித்ததில் பாதிக்கப்பட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர் பாலமுருகனின் உடல் பாதுகாப்புடன் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.
Next Story