வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ பாதுகாப்பு வார விழா

நாகை கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்
நாகை வேளாங்கண்ணிஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீ பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் தலைமை வகித்து, தேசிய தீ பாதுகாப்பு வார திட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக விளக்கினார். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மருத்துவர் ப.அருண்பதி, தேசிய தீ பாதுகாப்பு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மருத்துவ அலுவலர் ஆசியா மரியம் முன்னிலையில், வேளாங்கண்ணி தீயணைப்பு துறையின் முன்னணி தீயணைப்பு அலுவலர் ஆண்டனி பிரிட்டோ மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீ பாதுகாப்பு குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். பயிற்சியில், மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்கள், 108 பணியாளர்கள், டெங்கு களப்பணியாளர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள், வெளி நோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். தீ பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வேளாங்கண்ணி சுகாதார ஆய்வாளர் எஸ்.மோகன் செய்திருந்தார்.
Next Story