மர்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி

மர்ம காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி
X
குழித்துறை
குமரி மாவட்டம் குழித்துறை அடுத்த வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் மகள் பென்சி லின்டா (25).  இவர் களியக்காவிளை அருகே ஒரு தனியார் கல்லூரியில் எம்ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக இவருக்கு காய்ச்சல் இருந்து வந்த கூறப்படுகிறது.      தற்போது கல்லூரி தேர்வு நடைபெற்று வருவதால் தினசரி கல்லூரியில் சென்று வருவதும் காய்ச்சலுக்கு மருந்து வாங்குவதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு தேர்வு எழுத  சென்றவர் தேர்வு முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்துள்ளார். உடனே அவரை குழித்துறை அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது பென்சி லின்டா  இறந்து விட்டதாக தெரிவித்தனர்.       இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.
Next Story