கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவர் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவர் கைது
X
கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவர் கைது
நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராசு மேற்பார்வையில் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பிரபாவதி தலைமையில் மதுவிலக்கு பிரிவினர் பரமத்தி தாலுக்காவில் குன்னமலை மற்றும் கொண்டரசம்பாளையம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது குன்னமலைபகுதியில் அதே ஊரைச் சேர்ந்த 1).முத்துசாமி (61) தங்கவேல் (63) த/பெ ஆறுமுகம் மற்றும் சாமிநாதன் (61) த.பெ.மாரப்பன் ஆகியோர் கள்ளச்சாராயம் விற்பதை அறிந்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்களது விவசாய தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த சுமார் 17 லிட்டர் சாரயத்தையும் சுமார் 30 லிட்டர் கள்ளச்சாரயா ஊரலையும் கைப்பற்றினர். இதே போல் கொண்டரசம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் (64) த/பெ ரங்கசாமி என்பவரையும் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் நடத்திய விசாரணையில் அவரிடம் இருந்து சுமார் 20 லிட்டர் சாரய ஊரலையும் சுமார் 5 லிட்டர் கள்ளச்சாரயத்தையும் கைப்பற்றினர். பின்னர் 3 பேரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். பரமத்தி வேலூர் தாலுக்கா குன்னமலை மற்றும் கொண்டரசம் பாளையம் பகுதியில் திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் கள்ளச்சாரய வேட்டை நடத்தி சுமார் 22 லிட்டர் கள்ளச்சாரயமும் 50 லிட்டர் கள்ளச்சாரய ஊரலையும் கைப்பற்றி சட்விரோதமாக கள்ளச்சாரயம் காய்சியவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்தவாரம் கள்ளச்சாரயம் காய்ச்சியதாகமதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் திருச்செங்கோடு மோளிப்பள்ளியை சேர்ந்த மனோஜ் த/பெ தவசுந்தரம் என்பவர் மீது இன்று மாவட்ட ஆட்சியர் உமா அவர்களின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில்வழக்குப்பதியப்பட்டது. இனிமேல்கலாச்சாராய வழக்கில் யார் கைது செய்யப்பட்டாலும் குண்டாஸில் கைது செய்யப்படுவார்கள் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா எச்சரிக்கை விடுத்தார்.
Next Story