மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் பெற்றவருக்கு பாராட்டு

மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் பெற்றவருக்கு பாராட்டு
X
சேலத்தில் நடந்தது
கர்நாடக மாநிலம் மைசூருவில் தேசிய அளவில் 44-வது மூத்தோர் தடகள போட்டி நடைபெற்றது. இதில் சேலத்தை சேர்ந்த கந்தவேலு 75 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு, ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். அதே போன்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம், 200 மீட்டர் தடை தாண்டி ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் பெற்றார். இவரை சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ், செயலாளர் சண்முகவேல், துணைச்செயலாளர் ராஜாராம், வேலூர் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் வினோத், செயலாளர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story