பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன்

X
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசின் முன் அனுமதியின்றி பூட்டர் பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 4 பேர் மீது தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த புகாரில், அவர்கள் மீது கருப்பூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டதுடன், விசாரணைக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஜாமீனை ரத்து செய்ய கோரி போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது இந்நிலையில், இந்த வழக்கில் சூரமங்கலம் உதவி ஆணையர் அலுவலகத்தில் துணை வேந்தர் ஜெகநாதன் நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, 2 ஆவது நாளாக இன்று துணை வேந்தர் ஜெகநாதன், சூரமங்கலம் உதவிகாவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார்.. அவரிடம், உதவி காவல் ஆணையர் ரமலி ராமலட்சுமி விசாரணை நடத்தினார். முறைகேடு புகார் தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணை அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 5 மணி வரை நீடித்தது. 6 மணி நேர விசாரணைக்கு பின்னர், துணை வேந்தர் ஜெகநாதன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Next Story

