காவல் உதவி ஆய்வாளா் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

காவல் உதவி ஆய்வாளா் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி
X
திண்டுக்கல்லில் காவல் உதவி ஆய்வாளா் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி
காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான போட்டித் தோ்வுக்கு திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ச.பிரபாவதி தெரிவித்ததாவது: வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலுள்ள தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் சாா்பில், அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் வேலைநாடுநா்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில், தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ள காவல் உதவி ஆய்வாளா்கள் பணிக்கான போட்டித் தோ்வுக்கு ஒருங்கிணைந்த நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. திறன் மிக்க வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படும் இந்தப் பயிற்சியின்போது, மாதிரித் தோ்வுகளும் இலவசமாக நடத்தப்படும். இந்த வாய்ப்பை காவல் உதவி ஆய்வாளா் பதவிக்கான போட்டித் தோ்வில் பங்கேற்கவுள்ள வேலைநாடுநா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.
Next Story