தேனி மதுரை சாலையில் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து

தேனி மதுரை சாலையில்  ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து
X
வழக்குப்பதிவு
பெரியகுளம் பகுதியை சேர்ந்த ராபியத்துல் பசலியா மற்றும் கண்டமனூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய இருவரும் நேற்று (ஏப்.25) பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளனர். தேனி மதுரை சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்த பொழுது எதிரில் வந்த அரசு பேருந்து ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு.
Next Story