கோடை வெப்பத்தை தணிக்க போடி பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

மோர்பந்தல்
தேனி மாவட்டம் போடியில் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக போடி நகர் திமுக சார்பில் தொடங்கப்பட்ட நீர்மோர் பந்தலை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வன் அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் தண்ணீர் நீர்மோர் வழங்கினார். தேனி மாவட்டம் போடியில் கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகளின் தாகத்தை தணிக்கும் வகையில் போடி நகர் திமுக செயலாளர் புருஷோத்தமன் ஏற்பாட்டில், பேருந்து நிலைய நுழைவுவாயில் பகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு, தர்பூசணி,வாழை,தண்ணீர் பாட்டில்கள் வெள்ளரிப்பிஞ்சு, குளிர்பான பாட்டில்கள், மோர் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தேனி பாராளுமன்ற உறுப்பினரும், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கத்தமிழ்செல்வன் கலந்து கொண்டு கோடைவெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர்மோர், தண்ணீர் பழங்கள் வழங்கினார். கோடைகாலம் முடியும் வரை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் போடிநகர திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி அருந்திச்செல்கின்றனர்.
Next Story