கோடைக்கால பயிற்சி முகாம் ஆட்சியர் ஆய்வு

கோடைக்கால பயிற்சி முகாம் ஆட்சியர் ஆய்வு
X
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக 2025-26ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் கோடைக்கால இலவச பயிற்சி முகாம் 25.04.2025 முதல் 15-05-2025 வரை 21 நாட்கள் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் 6.30 வரையிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, தடகளம், கூடைப்பந்து, கையுந்துப்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டு பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டரங்கத்திலும், கால்பந்து விளையாட்டு பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டரங்கம் மற்றும் மலைக்கோட்டை விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்று வருகிறது. மேற்காணும் இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பயிற்சி பெற்று வந்த மாணவ, மாணவிகளிடம் பயிற்சியை பற்றி கேட்டறிந்து கலந்துரையாடினார். மேலும் விளையாட்டரங்கத்தில் உள்ள இயற்கை புல் தரை கால்பந்து மைதானம், தடகள ஓடுதளம், அலுவலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா மற்றும் பயிற்றுநர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்கள்.
Next Story