கரூரில்,கத்தியை காட்டி வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
கரூரில்,கத்தியை காட்டி வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. கரூர் மாவட்டம், ஆண்டாங் கோவில், செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி வயது 55 என்பவர் ஏப்ரல் 4-ம் தேதி, ஆத்தூர்,நத்தம் மேடு, சரவணா நகர் அருகே, நடந்து வரும்போது, நாகை மாவட்டம், நாகூர் தாலுகா, பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் வயது 33 என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 500 பறித்தது தொடர்பாக, கரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீதான விசாரணையை தொடர்ந்த போது, தனசேகரன் மீது ஈரோடு மாவட்டத்தில் 3- குற்ற வழக்குகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு வழக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 வழக்குகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வழக்கும்,தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 வழக்குகளும், திருப்பூர் மாவட்டத்தில் 4- வழக்குகளும், திருவாரூர் மாவட்டத்தில் 4- வழக்குகளும், திருச்சி மாநகரத்தில் ஒரு வழக்கு என மொத்தம் இவர் மீது 31 வழக்கு இருப்பது தெரியவந்தது. இதனால், தனசேகரனை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்ததன் பேரில்,இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தனசேகரன்-ஐ குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story





