கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காக சுற்று பேருந்து இயக்கம்

கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காக சுற்று பேருந்து இயக்கம்
X
சுற்றுலா பயணிகள் வசதிக்காக துவங்கப்பட்ட சுற்றுலா பேருந்துகள்.................
சுற்றுலா பயணிகள் வசதிக்காக துவங்கப்பட்ட சுற்றுலா பேருந்துகள்................. மலை மாவட்டம் நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா விமர்சியாக கொண்டாடப்படும். மே மாதம் துவங்கும் கோடை விழாவிற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுற்று பேருந்துகள் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தாவரவியல் பூங்கா தொட்டபெட்டா காட்சி முனை தேயிலை பூங்கா ரோஜா பூங்கா படகு இல்லம் ஆகிய வழித்தடங்களில் செல்கிறது. அதிகமான போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப சுற்றுலா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை பிரிவின் சுற்றுலா பயணிகள் அரசு பேருந்துகளையும் ரயில் சேவையையும் பயன்படுத்தி வருகை புரிய வேண்டும் எனவும் உள்ளூர் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கும் விதமாக சுற்று பேருந்துகளை அதிக அளவில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவிய தண்ணீரும் கேட்டுக் கொண்டுள்ளார். ஒரு நாளைக்கு ஒருமுறை டிக்கெட் எடுத்தாலே போதுமானது. அன்றைய தினம் முழுவதும் எந்த சுற்றுலா தளத்தில் இறங்கி ஏறினாலும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுபோன்ற இயக்கப்படும் சுற்று பேருந்துகளால் அதிகமான போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தளங்களையும் கண்டு ரசிக்க முடியும் எனவும் சுற்றுச்சூழல் அதிக பாதிப்பில்லாமல் பாதுகாக்கப்படும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர் பல்வேறு தரப்பினர். சுற்று பேருந்து இயக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story