மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

X
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலனை முன்னிட்டு நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய முகாம் பிற்பகல் ஒரு மணி வரை நடந்தது. முகாமில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 200க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு மாற்றுத் திறன் கொண்ட பணியாளர்களை தேர்வு செய்தனர்.
Next Story

