ஸ்ரீ அத்தனூர் அம்மன் கோவில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்..

X
Rasipuram King 24x7 |26 April 2025 8:38 PM ISTஸ்ரீ அத்தனூர் அம்மன் கோவில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று வெகு விமர்சையாக திருத்தேர் விழா எருமைக்கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பின்னர் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. திருத்தேர் நிகழ்வில் கொங்கு பாரம்பரிய நடனம் மற்றும் மேள தாளங்கள் முழங்க அனைவரும் ஆடி பாடி பரவசத்துடன் திருத்தேர் இழுத்துச் சென்றனர். 15 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த தேர் திருவிழா மற்றும் எருமைக்கடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று இருப்பது இப்பகுதியில் சேர்ந்த எட்டு பட்டி கிராம மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது. வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் சுகவனம் மற்றும் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இந்த கோவில் தேர் திருவிழாவை கோவில் நிர்வாக குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story
