ராசிபுரம் அருகே அம்மா பேரவை சார்பில் தெருமுனை பிரச்சாரம்,முன்னாள் அமைச்சர் சரோஜா பங்கேற்பு...

X
Rasipuram King 24x7 |26 April 2025 8:47 PM ISTராசிபுரம் அருகே அம்மா பேரவை சார்பில் தெருமுனை பிரச்சாரம்,முன்னாள் அமைச்சர் சரோஜா பங்கேற்பு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் பகுதியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் தெருமுனை பிரச்சாரம் ஆனது நடைபெற்றது. பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பத்தாண்டு கால சாதனங்களை விளக்கும் வகையிலும்,திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் இடையே வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரமானது குருசாமிபாளையம், பில்லாநல்லூர், பாவடி உள்ளிட்ட சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு நடை பயணமாக சென்று வீடு வீடாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினார். உடன் ராசிபுரம் ஒன்றிய கழக செயலாளர் வேம்பு சேகரன், பேரூர் கழக செயலாளர், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..
Next Story
