கண்டமானடி காமன் கோவிலில் மன்மதன் - ரதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

X
விழுப்புரம் அடுத்த கண்டமானடி கிராமத்தில் உள்ள காமன் கோவிலில், இந்தாண்டு சித்திரை உற்சவம், கடந்த மார்ச் 2ம் தேதி மன்மதன் சுவாமி உயிர்த்தெழுதல் நிகழ்வுடன் தொடங்கியது.தொடர்ந்து, தினசரி காலை, மாலை சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வாக ரதி - மன்மதன் சுவாமி திருக்கல்யாணம் நேற்று காலை 10:15 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க நடந்தது.தொடர்ந்து, மகா தீபாராதனையும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது.இதனையடுத்து, வரும் மே மாதம் 12ம் தேதி சித்திரை பவுர்ணமி தினத்தில், காலை 6:00 மணிக்கு மன்மதன் சுவாமியை, ஈஸ்வரன் அக்னியில் எரிக்கும் வரலாற்று நிகழ்வு நடக்கிறது.
Next Story

