திருவெண்ணைநல்லூர் அருகே போலி நகை வழக்கு மேலும் ஒருவர் கைது

X
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மனைவி அனிதா, 32; இவர் அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.கடந்த 7ம் தேதி பைக் மற்றும் மொபட்டில் வந்த 2 வாலிபர்கள் 3 மோதிரங்களை அடகு வைத்தனர். நகையை பரிசோதனை செய்ததில் அது, தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரிய வந்தது.இதுகுறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நகை அடகு கடைக்கு வந்ததும் அங்கிருந்த 2 வாலிபர்களில் ஒருவர் தப்பியோடினார்.பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர், கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் அஜித், 22; என்பதும் தப்பியோடியவர் ஊரல் கரைமேடு பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் சூர்யா, 22; என்பதும் தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து அஜித்தை கைது செய்தனர்.இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சூர்யாவை நேற்று கைது செய்தனர்.
Next Story

