பணி நிறைவு மூட்டா உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா

X
நாகர்கோவில் அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் வைத்து மூட்டா அமைப்பின் நான்காம் மண்டலம் சார்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பணி நிறைவு பெற்ற பேராசிரியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. மூட்டா நான்காம் மண்டல செயலாளர் பேராசிரியர் மகேஷ் அனைவரையும் வரவேற்றார். காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு பலியானோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மூட்டா நான்காம் மண்டல தலைவர் பேரா.ஆர்தர் டேனியல் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மத்திய குழு பொருளாளர் பேரா.ராஜ ஜெய சேகர் , மத்திய அமைப்பின் இணை பொதுச் செயலாளர் பேரா. ஷைலா குமாரி, கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் பென்னட் ஜோஸ், தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பேரா. மனோகர ஜஸ்டஸ் , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தோழர் லீடன் ஸ்டோன் , கன்னியாகுமரி மாவட்ட தொழிற்சங்க கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மூட்டா அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்ட வரலாறுகள், பொறுப்பாளர்களின் தியாகங்கள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டன. பணி நிறைவு பெற்ற பேராசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பணி நிறைவு பெற்றவர்கள் சார்பாக பேரா. ஹென்றி, பேரா. ஜேம்ஸ் ,பேரா.இராதாகிருஷ்ணன், பேரா. மகிழ் கமலம் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். மூட்டா நான்காம் மண்டலப் பொருளாளர் பேரா.கணேஷ் நன்றி கூறினார். ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story

