அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்
தர்மபுரி உழவர் சந்தை அருகில் நகராட்சி வார்டுக்கு உட்பட்டது 9வது வார்டு வட்டார வளர்ச்சி காலனி மசூதி தெரு,இந்த தெருவில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இவர்கள் பல்வேறு பணிகளுக்காக மசூதி தெருவில் இருந்து வட்டார வளர்ச்சி காலனி மற்றும் நகர் பகுதிக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த தெருவில் பல ஆண்டுகளாக தார்சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர் இது குறித்து 9வது வார்டு திமுகவை சேர்ந்த கவுன்சிலர் மாதேஸ்வரனிடம் பலமுறை பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் அவர் இதை கண்டு கொள்ளவில்லை. இவரின் மெத்தன போக்கை கண்டித்து இன்று பொதுமக்கள் தர்மபுரி கிருஷ்ணகிரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த எஸ் ஐ சதீஷ் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தினர் அங்கு வந்து விரைவில் சாலை அமைத்து தருவதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வட்டார வளர்ச்சி காலனி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சாலையில் செல்ல முடியாமல் அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story





