மாவட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா விண்ணப்பிக்க சிறப்பு முகாம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வரும் தகுதியான நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது. இதற்காக வரும், மே மாதம் 2-ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 5 மணி வரையில் ஆர்.ஐ., மற்றும் வட்டாட்சியர் அலுவலங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின் கட்டண ரசீது, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை நகல்களுடன் அலுவலர்களிடம் மனு அளித்து பயன்பெறலாம். என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
Next Story

