போச்சம்பள்ளி:முதியவரை கடப்பாரையால் தாக்கியவருக்கு காப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குடிமேனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(48) திருமணம் ஆகாத இவர் இதே பகுதியில் அடிக்கடி குடித்து விட்டு போதையில் இந்த பகுதியில் உள்ள நிலங்கள் எல்லாம் எங்களுடைய பூர்வீக சொத்து என்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இதே பகுதியை சேர்ந்த தருமன்(55) என்பவர் ஊரின் அருகே மது குடித்துகொண்டிருந்த போது அங்கு வந்த மாரியப்பன் இந்த இடம் எங்களுக்கு சொந்தம். இங்கு எப்படி மது குடிக்கலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தேங்காய் உரிக்கும் கடப்பாரையால் தாக்கி உள்ளார். இதுகுறித்தது தருமன் பாரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் மாரியப்பனை போலீசார் கைது செய்தனர்.
Next Story

