டூவீலர் மீது கார் மோதியதில் வாலிபர் பலி

X
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள க.கல்லம்பட்டியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (40) என்பவர் தச்சுத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (ஏப்.25) மாலை உறவினர் பிரதீப் (23) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது தும்பைப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் பின்னால் வந்த கார் இவரது இருசக்கர வாகனத்தில் மோதியதில் பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

