காஷ்மீர் படுகொலையை கண்டித்து மெழுகுவர்த்தி அஞ்சலி

காஷ்மீர் படுகொலையை கண்டித்து மெழுகுவர்த்தி அஞ்சலி
X
கன்னியாகுமரி
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி  குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் பலியாகினர். இந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், அதில் பலியான உயிர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டியும் மயிலாடியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த ஊர்வலத்திற்கு மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர்  நடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயல் தலைவர் மயிலை மகாலிங்கம், வட்டார பொருளாளர் நாகராஜன், வட்டார துணைத்தலைவர் ஜான்சன், வட்டார செயல் தலைவர் பாக்கியமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கம் நடேசன் கலந்து கொண்டு மௌன அஞ்சலி நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் வட்டார துணைத் தலைவர் ஜோஸ்பின் நிர்வாகிகள் சாரங்கன், ஏசுதாசன், மனோ, மோசஸ், சதீஷ், ராஜா சிங், அருணாச்சலம், சுயம்பு, ஜஸ்டஸ் உட்பட கலந்து கொண்டனர்.
Next Story