ராமநாதபுரம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட வழுதூர் உட்கடை உடைச்சியார் வலசை, ஐயன் கோவில் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காடு கன்னி அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 29ஆம் தேதி கணபதி பூஜையுடன் ஹோமம் துவங்க உள்ளது அதனைத் தொடர்ந்து 30 ஆம் தேதி புதன்கிழமை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யனார் ஆலயத்தின் நிர்வாக குழு செய்து வருகிறது வழுதூர் உடைச்சியார் வலசை , தெற்கு காட்டூர், மொட்டையன் வலசை முனுசு வலசை , ஏந்தல், குமராண்டி வலசை தெற்கு வாணி வீதி, படவெட்டி வலசை, வாலாந்தரவை குயவன்குடி ராமநாதபுரம் ரெகுநாதபுரம் பெருங்குளம் உச்சிப்புளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள உள்ளனர் அதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட உள்ளது என காடுகன்னி அய்யனார் ஆலயத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்
Next Story

