கோவை: கூட்ட நெரிசலில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் காயம் !

கோவை: கூட்ட நெரிசலில் தவெக பொதுச் செயலாளர்  ஆனந்த் காயம் !
X
தவெக மாநாட்டு கூட்ட நெரிசலில் பொதுச் செயலாளருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு.
கோவையில் நடைபெறும் தமிழக வெற்றிக்கழகத்தின் (த.வெ.க) பூத் கமிட்டி கருத்தரங்கில் நேற்று எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முகவர்களுக்கான அடையாள அட்டை வழங்கி அவர்கள் கருத்தரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் அந்த பகுதிக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர்களிடமும், தொண்டர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் கலந்துகொண்டிருந்த கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் கூட்ட நெரிசலில் சிக்கி காலில் படுகாயம் அடைந்தார். கருத்தரங்கு நடைபெற்ற கல்லூரி வளாகத்தில் தொண்டர்கள் அதிக அளவில் திரண்டிருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மருத்துவக் குழுவினருடன் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது. மாநாடு நடைபெறும் நிலையில் பொதுச்செயலாளருக்கு காலில் காயம் ஏற்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story