ராமநாதபுரம் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள திருச்சிலுவையாபுரத்தில் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வரும் அரசு உதவி பெறும் ஆர்.சி துவக்கப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் அமலன் தலைமையில், தலைமை ஆசிரியர் எலிசெபத், உதவி ஆசிரியர் அருளானந்து ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது. இப்பள்ளியில் 34 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், தற்போது படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குத் தேவையான டேபிள், சேர்கள், கண்ணாடி, கடிகாரம், மைக் செட், விளையாட்டு உபகரணம், ஆசிரியர்களுக்கு உடைகள், பழங்கள் உள்ளிட்டவைகளை மேள தாளத்துடன், குலவை போட்டு, சீர்வரிசையை ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளிக்கு வழங்கினர். சீர்வரிசை கொண்டு வந்த கிராம மக்களுக்கு பள்ளியின் சார்பில் ஆரத்தி எடுத்து, வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பசும்பொன் மார்னிங் ஸ்டார் மகளிர் கல்லூரி செயலர் அருட்சகோதரி அமலி, பசும்பொன் ஜேம்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் அருட்சகோதரி சுனந்தா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

