பங்களாப்புதூரில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

பங்களாப்புதூரில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
X
பங்களாப்புதூரில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
பங்களாப்புதூரில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த ஒரு பெண்ணை பிடித்து அவர் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தனர். அதில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் பங்களாப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த கன்னியம்மாள் (வயது 67) என்பதும், அங்கு தின்றுகொண்டு புகையிலை பொருட்கள் விற்றதும் தெரிந்தது. இதையடுத்து கன்னியம்மாளை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story