பாதுகாப்பு கேட்டு நகைக்கடை உரிமையாளர் எஸ் பி அலுவலகத்தில் மனு
தர்மபுரி நகரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் குமார் என்பவர் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனே நேரில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது,தர்மபுரி துரைசாமி நாயுடு தெருவில் நான் நகைக்கடை நடத்தி வருகிறேன். அருகில் எனது சகோதரரும் நகைக் கடை நடத்தி வருகிறார். எனது தந்தையாரின் வழிகாட்டுதலின்படி எங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ள இடத்தில் நான் ஒரு சில கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்தேன். இந்த கட்டுமான பணிகளை எனது சகோதரர் தடுத்து நிறுத்தி தகராறு செய்து வருகிறார். மேலும் எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும் எனது சகோதரர் என்னை பற்றி அவதூறான கருத்துக்களை பரப்பி வருகிறார். எனவே காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டு எங்களுக்கு சொந்தமான பொது இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முறையான அனுமதி பெற்று தர வேண்டுகிறேன். மேலும் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் முழு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும் என்று கூறினார்.
Next Story




