கோவை: பொய் சொல்லி ஆட்சியைப் பிடிக்க முடியாது - விஜய் !

X
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவையில் நேற்று இன்றும் நடைபெறுகிறது. இதில் நேற்று பேசிய தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் இனி ஒருவரும் பொய் சொல்லி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று குறிப்பிட்டார். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பட்டறை கோவையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், இது ஓட்டுக்கான சந்திப்பு அல்ல, மக்களுடன் ஒன்றிணைவதற்கான பயிற்சிப் பட்டறை என்று கூறினார். மேலும், முன்பு பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்தது பழைய கதை, இனி அது நடக்காது என்றும் குறிப்பிட்டார்.
Next Story

