மேல்மலையனுாரில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேல்மலையனுாரில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
X
வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மேல்மலையனுாரில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம், காலி பணியிடங்களை நிரப்புதல், அரசு திட்டங்களை நிறைவேற்ற போதிய கால அவகாசம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை வருவாய்த்துறை அலுவலர்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து, மேல்மலையனுார் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு வி.ஏ.ஓ., சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பாலாஜி, அன்பழகன், வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளர்கள் காளிதாஸ், குமரவேல், சர்வேயர் சங்க ஒருங்கிணப்பாளர் நாகராஜ், கிராம ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி உள்ளிட்ட 127 வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story