தேசத்தில் அமைதி நிலவ வேண்டி சிறப்பு பிரார்த்தனை!

X
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி ஏசு விடுவிக்கிறார் ஊழியத்தில் நடைபெற்றது. இதில், இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் தேவச் செய்தியை வழங்கினார். சிறப்பு செய்தியாக நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளை செவ்வையாக்குவேன் என்ற ஏசாயா 45 ஆவது அதிகாரம் இரண்டாவது வசனத்தில் படி தேவ செய்தியை வழங்கினார். இந்த பிரார்த்தனை கூட்டத்தில் அண்மையில் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் குறித்தும் தேசத்தில் அமைதி நிலவவும் தீவிரவாதிகள் மனம் திரும்பவும் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. இதில் சுமார் 50,000 பேர் கலந்து கொண்டனர்.
Next Story

