உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டம்

X
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள வடக்கு தெருவை சார்ந்தவர் பெரிய பாண்டி ஆட்டோ ஓட்டுநரான இவருடைய மனைவி கல்யாணி வயது 40 இவர்களுக்கு 18 மற்றும் 20 ஆகிய வயதுகள் கொண்ட கல்லூரியில் படிக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பெரிய பாண்டிக்கும் அவரது மனைவி கல்யாணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் அருகே உள்ள விருப்பாச்சி கிராமத்தில் தோட்ட வேலை செய்து வசித்து வந்தார். அந்த தோட்டத்தின் உரிமையாளர் சதீஷ்குமார். இவருடைய மனைவி ஆதிலெட்சுமி. இந்த தம்பதிககு கிருத்திகா (வயது 10) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த தம்பதியரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் இச்சூழலில் சதீஷ்குமாருக்கும் கல்யாணிக்கும் தொடர்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கல்யாணியின் மகன்களுடன் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் பிரிந்து சென்ற ஆதிலட்சுமி தனது கணவர் சதீஷ்குமார் உடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினார் இதனை ஏற்றுக் கொண்ட சதீஷ்குமார் கல்யாணியை துன்புறுத்தி விரட்ட தொடங்கினார் இதன் உச்சகட்டமாக கடந்த திங்கட்கிழமை கல்யாணியின் இரண்டு மகன்களையும் அடித்து விரட்டி விட்டார் இதுகுறித்து அவர்கள் இருவரும் தனது தந்தை பெரியபாண்டியிடம் முறையிடவே கடந்த செவ்வாய்க்கிழமை விருப்பாச்சியில் கிராம முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது இதனை அடுத்து அன்று இரவு கடுமையான மது போதையுடன் சதீஷ் குமார் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது புதன்கிழமை காலை அவர் கண்விழித்துப் பார்த்தபோது கல்யாணி இறந்து கிடப்பதாக சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார் இதுகுறித்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கல்யாணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இன்று நடந்த பிரேத பரிசோதனையில் இயற்கை மரணம் என்று மருத்துவர்கள் கூறுவதாகவும் கல்யாணியை கொலை செய்தது அவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்த சதீஷ்குமார் தான் என்றும் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும், சதீஷ்குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கல்யாணியின் கணவர் பெரிய பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இன்று திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனையின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர் கல்யாணியின் பிரேதத்தை வாங்க மறுத்தனர். தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Next Story

