பணி நியமனை ஆணை வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் பங்கேற்பு

பணி நியமனை ஆணை வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு போக்குவரத்து பணிமனையில் விழுப்புரம் கோட்டம் அனைத்து மண்டல பணிமனைகளில் பணியின் போது உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு பணி நியமனை ஆணை வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் கோட்ட மேலான் இயக்குனர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், நகர மன்ற தலைவர் மலர்விழிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாரிசுதாரர்கள் 19 பேருக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகள் சுதாகர், ரவி, முரளி, தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் பேசுகையில் ஒரு காலத்தில் சீர் குறைந்து இருந்த போக்குவரத்து துறையை இப்பொழுது மறு சீரமைப்பு செய்து ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளவர் முதலமைச்சர் எனவும், இந்தியாவிலே தமிழ்நாட்டில் மட்டும்தான் 20,000 பேருந்துகளை கொண்டு செயல்படும் போக்குவரத்து துறை நிறுவனம் அதனை நிறுவியவர் கலைஞர் எனவும், மேலும் எந்த ஒரு மாநிலத்திலும் கிராமப்புறத்திற்கு பேருந்துகள் கிடையாது எனவும் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 500 பேர் வசிக்கும் கிராமத்தில் கூட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது எனவும், பல்வேறு மாநிலங்களில் பேருந்துகள் முழுமையாக நிரம்பிய பிறகுதான் இயக்குவார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் அட்டவணை பிரகாரம் உரிய நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகி மக்களுக்கான சேவையை உண்மையாக வழங்கி வருவது போக்குவரத்து துறை எனவும், தீபாவளி பொங்கல் என அனைத்து பண்டிகை நாட்களிலும் விடுமுறை இல்லாமல் இரவு 3 மணி வரை உழைக்கக்கூடிய துறையாக போக்குவரத்து துறை இயங்கி வருகிறது ஆகையால் தான் இந்திய அளவில் 69 அவார்டுகளில் 19 அவாடுகளை பெற்றுள்ளது நமது தமிழ்நாடு போக்குவரத்து துறை என பெருமிதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சாலை விபத்து கண்காணிப்பு வாகனத்தை கொடியாசைத்து தொடங்கி வைத்து, அரசு பேருந்துகளில் திருக்குறள் ஸ்டிக்கரை ஒட்டினார்.
Next Story