குமரியில் தொடர் கோடை மழை

குமரியில் தொடர் கோடை மழை
X
அணைகளில் நீர்மட்டம் உயர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கோடை மழையால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 31.86 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 150 கன அடி நீா் வந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 31.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 148 கன அடி நீா் வந்தது.இந்த நிலையில் மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும், சமவெளி பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக குலசேகரம், திற்பரப்பு, களியல், அருமனை, திருவட்டாறு, சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் நீா் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இவா்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
Next Story