தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து நாகை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து நாகை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும்
X
கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் மே 1-ம் தேதி தொடக்கம்
நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் முனைவர் ஜூலியஸ் விஜயகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தோடு இணைந்து, நாகை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் வருகிற மே மாதம் 1-ம் தேதி முதல் வருகிற 21-ம் தேதி வரை, நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் மைதானத்தில் நடைபெற உள்ளது. முகாமில் 19 வயதிற்குட்பட்ட நாகை மாவட்டத்தை சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சென்னையை சார்ந்த BCCI லெவல் -I பயிற்சியாளர் விவேக் பயிற்சி அளிக்க உள்ளார். மேலும் விபரங்களுக்கு,நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் முனைவர் ஜூலியஸ் விஜயகுமாரை 9443124237 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story