நாகை வெளிப்பாளையம் காளியம்மன் ஆண்டு திருவிழா தேரோட்டம்

X
நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆண்டு திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18- ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் பூத்தட்டுகளை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மறுநாள் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. விழா நாட்களில், அம்மன் குதிரை, சிம்மம், ரிஷபம், கிளி உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக, காளியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 10 மணியளவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

