கம்பத்தில் கந்து வட்டி புகாரில் ஒருவர் கைது

X
கம்பத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (53). இவர் அதே பகுதியை சேர்ந்த மஞ்சு என்பவரிடம் ரூ.10,000 கடன் வாங்கி உள்ளார். அதற்கு 48,000 வட்டியாக செலுத்தியுள்ளார். இருந்த போதிலும் வட்டி அசல் சேர்த்து 18,000 செலுத்த வேண்டும் என கூறி மஞ்சு அவரது கணவர் மணிகண்டன் நேற்று முன் தினம் ஆரோக்கியராஜ் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். இது குறித்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை (ஏப்.26) கைது செய்தனர்.
Next Story

