நுகர்வோர் கண்காணிப்பு குழு கூட்டம்

X
திருத்துறைப்பூண்டி நகர வட்ட வழங்க அலுவலகத்தில் நுகர்வோர் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முருகானந்தம் ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டுறவு சார்பதிவாளர் உணவு பாதுகாப்புத்துறை மின்வாரியம் இந்து சமய அறநிலையத்துறை சுகாதாரத்துறை நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் பங்கேற்காததால் அலுவலர்கள் இனி தவறாமல் கலந்து கொள்ள கேட்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் பேசுகையில் பூசலங்குடி கிராமத்திற்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை கட்டிடத்திற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் முதல்வர் காப்பீடு பிரதமர் காப்பீடு திட்ட அட்டைகளை ஏற்காத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மன்னார்குடி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Next Story

