ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் திடீர் மரணம்

ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் திடீர் மரணம்
X
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்த காளையின் உரிமையாளர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் டாக்டர் ஜி.ஆர் கார்த்திக் நினைவாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் நேற்று ( ஏப்.26) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை உசிலம்பட்டி ஆர்டிஓ சண்முக வடிவேல் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பற்றிய உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். வருவாய் துறையினர், மருத்துவ துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டிக்கு காளையை அழைத்து வந்த அரியலூர் மாவட்டம் மீன் சுருட்டியைச் சேர்ந்த காளை உரிமையாளர் முத்துக்குமாரசாமி (51) என்பவர் நெஞ்சுவலி ஏற்பட்டு அரங்கத்திலிருந்து மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story