மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம்
போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைவை நினைவு கூறும் வண்ணம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.சி. திருச்சபை மற்றும் குழந்தை ஏசு ஆலயம் சார்பில் போப்பாண்டவரின் திருஉருவபடத்துடன் உசிலம்பட்டி குழந்தை ஏசு ஆலயத்திலிருந்து உசிலம்பட்டி பேருந்து நிலையம், தேவர் சிலை வழியாக பேரையூர் ரோடு ஆர்.சி. திருச்சபை வரை கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணியை இன்று (ஏப்.27) நடத்தினார்கள். தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்பட்ட பின், மௌன அஞ்சலியும் செலுத்தி அவரது திரு உருவப்படத்திற்கு ஏராளமான கிருத்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
Next Story



