விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

X
வெள்ளகோவில் குமாரவலசை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 55). இவர் விசைத்தறி பட்டறையில் வேலை செய்து வந்தார். கடன் பிரச்சினை காரணமாக தனது வீட்டுக்கு வெளியே உள்ள மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து வெள் ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஜெகதீசனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஹரிஹரன் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர்.
Next Story

