அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் கருத்தரங்கம்

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் கருத்தரங்கம்
X
தாராபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது
தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்பேத்கரைப் பற்றி கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் மோகனப்பிரியா சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் பொன்பாலகணபதி கலந்து கொண்டு பேசினார். மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கே.கார்வேந்தன், மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன், கூட்டுறவு பிரிவு மாநில செயலா ளர் சுகுமார், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் சித்தார்த் வேலுச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி, மாநில இளைஞரணி செயலாளர் யோகி உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாராபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
Next Story