உசிலம்பட்டி பேருந்து முறையாக இயக்க கோரிக்கை.

உசிலம்பட்டி பேருந்து முறையாக இயக்க கோரிக்கை.
X
மதுரை சோழவந்தானில் உசிலம்பட்டி பேருந்தை முறையாக இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் மக்கள் பயன்படும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு செக்கானூரணி பணிமனைக்கு சோழவந்தான் வழியாக இரண்டு பேருந்துகளும், திருமங்கலம் பணிமனைக்கு சோழவந்தான் வழியாக ஒரு பேருந்தும், சோழவந்தான் மக்கள் பயன்படும் வகையில் சோழவந்தான் பணிமனைக்கு அலங்காநல்லூர் பேருந்துகளையும் புதிதாக வழங்கப்பட்டது. தற்போது உசிலம்பட்டி பணிமனையில் இருந்து சோழவந்தான் பகுதி மக்களுக்காக புதிய பேருந்தை தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ளார். ஆனால் உசிலம்பட்டி பேருந்து சோழவந்தான் பேருந்து நிலையம் வரை வந்து செல்லாமல் ஓட்டுனரின் அலட்சியத்தால் தென்கரை பாலத்தில் திரும்பி விடுவதால் உசிலம்பட்டி பேருந்தில் செல்ல காத்திருக்கும் பயணிகள் செக்கானூரணி விக்கிரமங்கலம் போன்ற மற்ற பேருந்துகளில் சென்று வருகின்றனர். இதற்கு முன்பு செயல்பட்ட உசிலம்பட்டி பேருந்து சோழவந்தான் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கவில்லை.. இனிவரும் காலங்களில் புதிதாக வழங்கப்பட்ட பேருந்தை சரியான முறையில் சரியான நேரத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்கு இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story