தோட்டக்கலை கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் கிணற்று நீரில் மூழ்கி பலி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இந்திய ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராம்தர் தாகூர், ஐஸ்வர்யா தம்பதியரின் மகன் சர்வேஷ் (வயது 19) இளங்கலை தோட்டக்கலை பட்டப் படிப்பு முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி பாடித்து வருகிறார். இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் முதலாம் ஆண்டு கல்லூரி படிக்கும் காசி விஸ்வநாதன், லதீஷ் குமார், அபினேஷ், பிரவீன், சர்வேஷ் உள்ளிட்ட 9 மாணவர்கள் பெரியகுளம் நகரில் தேவையான பொருட்கள் வாங்க வந்த பொழுது பங்களாப்பட்டி பகுதியில் தனியார் தோட்டத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த கிணற்றில் குளித்துள்ளனர். இதில் உடன் வந்த எட்டு மாணவர்களுக்கும் முழுமையான நீச்சல் பயிற்சி இல்லாத நிலையில் கிணற்றில் குளித்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது முற்றிலும் நீச்சல் தெரியாத மாணவர் சர்வேஷ் கிணற்றில் குதித்து குளிக்க முற்பட்ட பொழுது நீரில் மூழ்கி நீண்ட நேரம் வெளிவராமல் இருந்ததைத் தொடர்ந்து உடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு நிலையில்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நீரில் மூழ்கிய அரசு தோட்டக்கலை கல்லூரி மாணவரை தேடி வருகின்றனர். தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீரில் மூழ்கிய கல்லூரி மாணவரை கொக்கி உள்ளிட்ட உபகரணங்களை போட்டு தேடி வருகின்றனர். மேலும் அரசு தோட்டக்கலை கல்லூரி மாணவர் கிணற்று நீரில் மூழ்கி பலியான நிலையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு கல்லூரி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். காவல்துறை விசாரணையில் கல்லூரி விடுதியில் இருந்து விடுதி காப்பாளரிடம் அனுமதி பெற்று பெரியகுளத்தில் பொருட்கள் வாங்க வந்ததாகவும், வந்தவர்கள் கிணற்றில் குளிக்க ஆசைப்பட்டு சென்ற பொழுது சர்வேஷ் நீரில் மூழ்கியதாக தெரிவித்தனர்.
Next Story




