ஈரோட்டில் காய்கறி வரத்து அதிகரித்தால் விலை குறைவு

X
ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் 700 -க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம்,கேரளா ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இன்று வழக்கத்தை விட காய்கறிகள் அதிகரித்து வந்ததால் கடந்த வாரத்தை விட இன்று மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது. அதன்படி கடந்த வாரத்தை விட இன்று ரூ.10 முதல் 20 வரை காய்கறிகள் விலை குறைந்துள்ளது. இன்று ஈரோடு வ உ சி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:- கத்திரிக்காய் - 40, வெண்டைக்காய் - 20, பீர்க்கங்காய் - 50, புடலங்காய் - 30, முள்ளங்கி - 25, பாவைக்காய் - 55, சுரைக்காய் - 10, கொத்தவரை - 60, கருப்பு அவரை - 120, பெல்ட் அவரை - 80, கோவக்காய் - 25, முருங்கைக்காய் - 50, பச்சை மிளகாய் - 40, கேரட் - 50, பீன்ஸ் - 80, பீட்ரூட் - 50, உருளைக்கிழங்கு - 35, இஞ்சி - 50,காலிஃப்ளவர் - 30, முட்டைகோஸ் - 20, தக்காளி - 15, சின்ன வெங்காயம் - 30, பெரிய வெங்காயம் - 25.
Next Story

