கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி. எனவே கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்பொழுது பெய்த கோடை மழையால் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தற்பொழுது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காலை முதலே அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் கும்பக்கரை அருவியில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க வந்த சுற்றுலா பயணிகள் அருவியல் நீண்ட நேரம் குளித்து வெப்பத்தின் தாக்கத்தை தணித்து மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கும்பக்கரை அருவியில் முற்றிலும் நீர் வரத்து இன்றி வற்றி இருந்த நிலையில் இந்த ஆண்டு தொடர்ந்து அவ்வப்பொழுது பெய்து வரும் கோடை மழையால் அருவிக்க நீர் வரத்து சீராக உள்ளதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
Next Story




